பதினாறு ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவில் மீண்டும் மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு கடும் பஞ்சத்தில் இருந்த வடகொரியா, அதன் பின் மீண்டு வந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு மீண்டும் வறட்சி தாக்கியது.
அதன் பின்னர் தற்போது 2017 ஆம் ஆண்டு மழையின் அளவு குறைந்துள்ளதால், வடகொரியாவில் மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, அரிசி, சோயா பீன்ஸ் போன்றவற்றின் மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வடகொரியாவில் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-lankasri.com