இந்தப் போர், ஆயுதங்கள் போன்றவைகளை விட்டுச் செல்ல வேண்டும்: நாடு திரும்ப துடிக்கும் இளம் பெண்

germஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தான் இந்த இயக்கத்தில் இணைந்ததற்காக வருந்துவதாகவும், தன் குடும்பத்தாருடன் மீண்டும் சேர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் Pulsnitz பகுதியைச் சேர்ந்தவர் லிண்டா.

இவர் கடந்த கோடை காலத்தில் ஜேர்மனியில் காணமால் போயுள்ளார், அதன் பின் இவர் துருக்கி சென்று அங்கிருந்து ஐ.எஸ் ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளார்.

அதன் பின்னர் மரியம் என பெயர் மாற்றிக் கொண்ட லிண்டா, தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்துள்ளார்.

லிண்டா தலைமறைவான விவகாரம் அரசுக்கு கிட்டியதும் ஜேர்மனியின் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் மோசூல் நகரை கைப்பற்றிய அரசுப் படையினர் ஐந்து பெண்களை கைது செய்ததாகவும் அவர்களுள் இப்பெண்ணும் இருந்ததாக ஜேர்மன் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். தற்போது ஈராக்கில் உள்ள அவருக்கு தூதரக அதிகாரிகள் உதவி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அவரை இரண்டு ஜேர்மனி ஊடகங்கங்கள் பேட்டி எடுத்ததாகவும், அப்போது அவர், தான் இந்த இயக்கத்தில் இணைந்ததற்காக வருந்துவதாகவும், தன் குடும்பத்தாருடன் மீண்டும் சேர விரும்புவதாகவும். இதனால் நாடு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் போர், ஆயுதங்கள் அதன் சப்தம் ஆகியவற்றை விட்டுச் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

-lankasri.com