லிபியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ள கும்பல் ஒன்றை வரிசையாக நிறுத்தி ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.
குறித்த வீடியோ காட்சியில் ஆரஞ்சு வண்ண உடை அணிவிக்கப்பட்டுள்ள 18 கைதிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு அவர்களை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அதில் கொல்லப்பட்ட நபர்கள் லிபியா பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் என தெரிய வந்துள்ளது.
லிபியாவில் இயங்கிவரும் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டின் தேசிய ராணுவத்தின் தலைவர் காலிஃபா ஹஃப்தர் தலைமையிலான படைகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், ஒரு முக்கிய நகரை கைப்பற்றியதாக அறிவிப்பு வெளியான சில மணித்துளிகளில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ள கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த வீடியோ காட்சிகளில் தோன்றும் ராணுவத்தினர் யார் யார் என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மட்டுமின்றி லிபியா ராணுவத்தின் உத்தரவின் கீழ் தான் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளனவா எனவும் உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை என தெரிய வந்துள்ளது.
ஆனால் லிபியாவில் இருந்து வெளியாகும் குறிப்பிட்ட சில பத்திரிகைகள் மட்டும் இது ராணுவ அதிகாரி காலிஃபா ஹஃப்தர் தலைமையிலான சிறப்பு ராணுவத்தினரே செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் லிபியா பொலிஸ் அதிகாரிகள் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாகவே குறித்த பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
-lankasri.com