பிரிட்டிஷ் இராணுவத்தில் ஜிகாதிகள்

ISIS-Syriaசிரியாவிலிருந்து நாடு திரும்பும் பிரித்தானியா தீவிரவாதிகள் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர முயற்சிப்பதாக புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த புலனாய்வு அதிகாரி கூறியதாவது, இராணுவத்தில் இணையும் தீவிரவாதிக்கு இளவரசி அல்லது அரச குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியாற்ற முடியும், அரச கடற்படையில் சேரும் தீவிரவாதி அணுசக்கி நீர்மூழ்சிக் கப்பலில் பணியாற்ற முடியும்.

இவ்வாறு சேரும் தீவிரவாதிகள் ஒரு நாள் தாக்குதலில் ஈடுபடலாம். தற்போது வரை பிரித்தானியாவிலிருந்து சுமார் 850 பேர் ஐ.எஸ் குழுவில் இணைய சென்றுள்ளனர்.

நாடு திரும்பும் பிரித்தானியாவில் பிறந்த ஐ.எஸ் குழுவை சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர முயற்சிப்பார்கள்.

இராணுவத்தில் சேர்க்கப்படும் நபருக்கு கட்டாயமாக வெடிகுண்டு உருவாக்கவும், செயலிழக்க வைக்கும் அரச பொறியாளர்களால் பயிற்சி வழங்கப்படுவது மிக முக்கிய பிரச்சினையாக அமைந்துள்ளது.

எனினும், ஆயுத படையில் சேரும் ஒவ்வொருவரும் தீவிர சோதனைக்கு பின்னரே சேர்க்கப்படுவார்கள்.

பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் நாடுகளுடன் தொடர்பு கொண்ட தனிநபர்கள் மீது கூடுதல் எதிர்ப்பு பயங்கரவாத சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசாங்க புள்ளிவிவரங்கள் மற்றும் சுதந்திர தகவலின் தொடர்ச்சியான கோரிக்கைகளின் படி, இதுவரை 250 க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-lankasri.com