இன்று காலை உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்னிலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பக்கத்தான் ஹராபானைப் படுமோசமாகத் தாக்கிப் பேசியதை “வெட்கங்கெட்ட வசைபாடல்” என்று எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா இஸ்மாயில் வருணித்தார்.
பிரதமரின் பேச்சில் “அச்சத்தையும் அதிகாரம் பறிபோமோ என்ற பரிதவிப்பையும்” கண்டதாக அவர் கூறினார்.
“14வது பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன்னை எதிர்க்க தயாராகிவரும் ஹராபான் நாளுக்கு நாள் வலுபெற்று வருகிறது, ஆனால், நஜிப்பின் நிர்வாகமோ 1எம்டிபி போன்ற நிதி ஊழல்கள் என்னும் சேற்றில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது.
“14வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபான் வெற்றி பெற்றால் மக்களின் பணத்தைக் கொள்ளையிட்ட திருடர்கள் நீதிமுன் நிறுத்தப்படுவார்கள் என்ற பயம் நஜிப்புக்கு வந்து விட்டது”, என வான் அசிசா ஓர் அறிக்கையில் கூறினார்.