பாகிஸ்தானில் ஐந்து வயது சிறுமியை 22 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் Dakhan பகுதியில் உள்ள Raman Shar கிராமத்தில் 5 வயது சிறுமிக்கும், 22 வயது இளைஞருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் திருமணம் நடைபெறும் இடத்திற்கு தாமதமாக சென்றுள்ளதால், அங்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இருப்பினும் 5 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக மணமகன் Habibullah Shar, திருமணத்தை பதிவு செய்த பதிவாளர் Molvi Kifayatullah Bhutto(40) மற்றும் மணமகனின் தந்தை ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 18 வயது குறைந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் மீறி மணமகன் 5 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளதால், அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-lankasri.com
மிருகங்கள் வாழும் நாடு.உங்கள் அரசாங்கம் சட்டம் விதித்தும் இந்த அநாகரீக காரியத்தை செபவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கவேண்டும்.