‘அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேவையாற்ற முடியாது’: டிரம்ப்

donald-trump_orderedஅமெரிக்க ராணுவத்தில் “எந்த விதத்திலும்” திருநங்கைகள் பணியாற்ற முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், ராணுவ வல்லுனர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறியுள்ள அவர் “வியக்கத்தக்க அளவில் மருத்துவ செலவுகளும், இடையூறுகளும் ஏற்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒபாமா தலைமையிலான நிர்வாகம் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் வெளிப்படையாக சேவை செய்ய அனுமதிக்க முடிவு செய்தது.

ஆனால், ஆறு மாதங்கள் கால தாமதத்திற்குபின், ஜூன் மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ், திருநங்கைகளை பணியில் சேர்க்க ஒப்புதல் அளித்தார்.

குடியரசு கட்சியை சேர்ந்த சிலர் திருநங்கைகள் பணியில் அமர்த்தப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பினர்.

ராணுவத்தில் சேவையாற்றி வரும் 1.2 மில்லியன் பேரில், 2,450 பேர் திருநங்கைகள் என கடந்த 2016-ஆம் ஆண்டு தி இண்டிபெண்டண்ட் ரேண்ட் கார்போரேசன் கணக்கிட்டுள்ளது.

தொடர்ச்சியாக டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் “ராணுவப்படையின் அதிகாரிகள் மற்றும் வல்லுனர்களுடன் கலந்தாலோசித்த பின் அமெரிக்க அரசு எந்த விதத்திலும் திருநங்கைகளை பணியில் ஏற்றுக்கொள்ளவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நமது ராணுவம் தீர்க்கமான மற்றும் மாபெரும் வெற்றிகளை அடைவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர திருநங்கைகளை ராணுவத்தில் சேர்ப்பதால் உண்டாகும் வியக்கத்தக்க மருத்துவ செலவுகள் மற்றும் இடையூறுகளுக்கு உள்ளாகக்கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கையாளார்களை ராணுவத்தில் சேர்த்துக் கொள்வதற்கு விதித்திருந்த வெளிப்படையான தடையை கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் நீக்கியது.

ராணுவத்தில் பாலியல் மற்றும் பாலினம் என்ற தலைப்பில் ஆய்வு செய்த அமெரிக்க நிறுவனம் பால்ம் செண்டரின் இயக்குனர் ஆரோன் பெல்கின் பிபிசியிடம் இதுகுறித்து தெரிவிக்கையில், “எதுவும் கேட்காதீர்கள், எதிவும் கூறாதீர்கள்” என்பதின் மூலம் பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் போன்று ராணுவத்தில் இருக்கும் திருநங்கைகளும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

“இதுபோன்ற திட்டங்கள் ராணுவத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல்வேறு ஆதாரங்கள் தெரிவித்தாலும் திருநங்கைகளுக்கு தடைவிதிக்க அதிபர் ஏன் முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை” என்றும் பெல்கின் தெரிவித்துள்ளார்.

பாலியல் சீர்திருத்தங்களை மேம்படுத்தும் திருநங்கைகளை வேலைவாய்ப்போடு ராணுவத்தின் மருத்துவ செலவுகளை ஒப்பிடுவதற்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். -BBC_Tamil