பழங்குடியினர் பயிலும் பள்ளிகள் மீது வெடிகுண்டுகள் வீசப்படும் என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பழங்குடியினர் பள்ளியில், புரட்சி படையினர் அரசுக்கு எதிராக மாணவர்களை தூண்டி வருவதாகவும், அதுமட்டுன்றி மாணவர்களை பல்வேறு குற்றங்களில் ஈடுபடுத்தப்படுப்பவதாகவும் அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடர்டே குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பழங்குடியினர் பள்ளிகளில் இருக்கும் லுமாட் எனும் புரட்சி படையினர், அங்கிருந்து உடனடியாக வெளியேற தவறினால், அவர்கள் இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
-lankasri.com