ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஆதரவளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டார்.
அதன் பின் ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கான மசோதாவிற்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
ஆனால் டிரம்ப் ரஷ்யாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சிகள் எடுத்துவருவதால், அவர் ஒப்புதல் அளிக்கமாட்டார் என்று கூறப்பட்டது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ரஷ்யா, ஈரான், சிரியா நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க டிரம்ப் உறுதியான ஆதரவை அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் செனட் சபையின் ஒப்புதலையடுத்து ஜனாதிபதி கையெழுத்திட்டப் பின் அந்த மசோதா சட்டமாகிவிடும் என்று கூறப்படுகிறது.
-lankasri.com