சுவிஸில் உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி மகளின் பல மில்லியன் பிராங்க் சொத்துகள் முடக்கம்

சுவிஸில் உஸ்பெகிஸ்தானின் முதல் ஜனாதிபதியின் மகள் குல்நாரா கரிமோவாவுக்கு சொந்தமான சுமார் 800 மில்லியன் சுவிஸ் பிராங்க் மதிப்புள்ள சொத்துகளை சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் முடக்கியுள்ளது.

ஊழல் மீறல்களின் விளைவாக பணமோசடி என்ற சந்தேகத்தின் பேரில் 2012 யூலை கரிமோவா உள்ளிட்ட 6 பேர் மீது சுவிட்சர்லாந்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குல்நாரா கரிமோவா மீதான குற்றவியல் வழக்கு தொடர்பாக சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா உட்பட 19 நாடுகளில் சட்ட உதவி நடைமுறைகளை மேற்கொண்டது.

முன்னதாக வெள்ளிக்கிழமை உஸ்பெகிஸ்தான் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம், பல குற்றவியல் தொடர்பாக கரிமோவா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

விசாரணையில், குல்நாரா கரிமோவா குழுவின் சொத்துக்கள் மொத்தம் 1.394 பில்லியன் டாலர், 63.5 மில்லியன் யூரோக்கள், 27.1 மில்லியன் பவுண்டுகள் மற்றும் 18.5 மில்லியன் பிராங்க்கள் ஆகியவை 12 வெளிநாட்டுகள் காணப்பட்டதாக உஸ்பெகிஸ்தான் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

1972ம் ஆண்டு பிறந்த குல்நார கரிமோவா. 2013ம் ஆண்டில் ஊழல் மையத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது நினைவுக் கூறதக்கது.

-lankasri.com