வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்துவிட்டது: அமெரிக்கா

norrthவட கொரியா சமீபத்தில் நடத்திய ஏவுகணை சோதனை பற்றி அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் மீண்டும் ஒரு ஏவுகணைச் சோதனை நடத்தி வடகொரியா பரபரப்பை கிளப்பியது. வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தன.

இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், வட கொரியா இரண்டாவது முறையாக ஐசிபிஎம் சோதனை செய்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டபோவதாக வந்த தகவல்கள் உண்மையில்லை. வட கொரியா விஷயத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுவது எந்தவிதப் பயனும் அளிக்காது.

இறுதியாக முக்கிய முடிவு எடுப்பது குறித்து சீனா தான் முடிவு செய்ய வேண்டும். வட கொரியா விஷயத்தில் இனி பேச்சுக்கு இடமில்லை. பேச்சு வார்த்தைக்கான நேரம் முடிந்துவிட்டது.

சர்வதேச அமைதிக்கு வட கொரியா ஆபத்தாக திகழ்வது இப்போது அனைவருக்கும் தெளிவாக தெரியவந்துள்ளது என எச்சரித்துள்ளார்.

-lankasri.com