பிரான்ஸின் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அரசு வேலைகளில் நியமிக்கக்கூடாது என ஜனாதிபதி மேக்ரான் உத்தரவிட்டுள்ளார்.
பிரான்ஸில் நாடாளுமன்ற எம்.பி.-க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தங்களுக்குத் தேவையான அரசுப் பணிகளில் நியமிப்பதாக குற்றம் எழுந்துள்ளது.
இதையடுத்து பிரான்ஸ் அரசு புதிய அதிரடி சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என யாரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தங்கள் உதவியாளர் பணியில் கூட நியமிக்கக்கூடாது என ஜனாதிபதி மேக்ரான் உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தை மீறி தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணியை வழங்கினால் அவர்களுக்கு 40 லட்சம் ரூபாய் அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் மேக்ரான் அறிவித்துள்ளார்.
-lankasri.com