வடகொரியாவை விட்டு அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறுங்கள்: டிரம்ப் நிர்வாகம்

வடகொரியாவை விட்டு அமெரிக்கா குடிமக்கள் அனைவரும் வரும் செப்டம்பர் 1 ஆம் திகதிக்குள் வெளியேறுங்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மேற்கொண்ட சோதனை உலகநாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமின்றி வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் அமெரிக்காவின் எந்த பகுதியையும் தங்களால் தாக்க முடியும் என்று கூறியிருந்தார். இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அரசு, வரும் செப்டம்பர் 1-ஆம் திகதி முதல் வட கொரியாவுக்கு பயணம் செய்யவோ, வட கொரியா வழியாக பயணம் செய்யவோ அமெரிக்க குடிமக்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், இதையும் மீறி யாரேனும் அமெரிக்க குடிமகன் வட கொரியாவுக்கு பயணம் செய்ய விரும்பினால், சிறப்பு அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் இந்த சிறப்பு அனுமதி பத்திரிகையாளர்கள், ரெட் க்ராஸில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

-lankasri.com