அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வடகொரியா

north_south_001தொடர் ஏவுகணை சோதனை எதிரொலியாக பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது வடகொரியா.

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பொருளாதார தடையை ஐக்கிய நாடுகள் மன்றம் ஏற்றுக் கொண்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாடு, அமெரிக்காவை அழித்தொழிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கையை வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஒளிபரப்பியுள்ளது.

ஆனால் குறித்த பொருளாதார தடைக்கு ஒப்புதல் அளித்தது ஐக்கிய நாடுகள் மன்றம் என்ற போதிலும், அதற்கு முயற்சி மேற்கொண்டது அமெரிக்கா என்பதால் அமெரிக்கா மீது வடகொரியா கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறித்த பொருளாதார தடை காரணமாக வடகொரியாவின் ஏற்றுமதி கடும் வீழ்ச்சியை சந்திக்கும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகள் மட்டுப்படும். இதனால் கடும் பொருளாதார நெருக்கடியை வடகொரியா சந்திக்க நேரிடும்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் குறித்த தடையானது இந்த தலைமுறையில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை என, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான அமெரிக்காவின் தூதர் Nikki Haley தெரிவித்துள்ளார்.

கடந்த யூலை மாதம் வடகொரியா மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு பதிலடி தருவகையில் இந்த பொருளாதார தடையானது பார்க்கப்படுகிறது.

வடகொரியாவின் குறித்த ஏவுகணை சோதனையானது அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது என கூறப்படுகிறது.

ஆனால் ஐக்கிய நாடுகள் மன்றம் மேற்கொண்டுள்ள இந்த தடையானது அமெரிக்காவின் அறுதிக்கு வழி வகுக்கும் என வடகொரிய ஊடகம் காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள பொருளாதார தடைக்கு இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com