சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாண தலைநகர் செங்குடுவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர்.
நிலநடுக்கத்தால் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் என பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 100 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சுவதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சிச்சுவான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவது அடிக்கடி ஒன்று என கூறப்படுகிறது.
-dailythanthi.com