பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாதுகாப்பு வீரர்கள் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற நபரை பொலிசார் சுட்டு பிடித்துள்ளனர்.
பாரிஸில் மர்ம நபர், பாதுகாப்பு வீரர்கள் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது, இதில் 6 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் சம்பவயிடத்திலிந்த தப்பி ஓடிய நிலையில் தீவிரவாத தடுப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், வடக்கு பிரான்சில் உள்ள A16 நெடுஞ்சாலையில் வைத்து தாக்குதல்தாரியை கைது செய்துள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதின் போது மர்ம நபர் தப்பி ஓட முயன்றதால் பொலிசார் அவனை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ள நபர் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
எனினும், கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
-lankasri.com

























