15,000 ஆயிரம் ஏவுகணை ஏவ முடியும்: அமெரிக்கா தலையில் கை வைக்கும் வட கொரியா !

ஒரே நிமிடத்தில் சுமார் 15,000 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி, தென் கொரிய தலை நகர் சியோலை தரைமட்டமாக்க வட கொரியா தயார் நிலையில் உள்ளது. இதற்க்கும்  அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு என்று, நீங்கள் நினைக்க கூடும். அங்கே தான் செக் வைத்துள்ளார் வட கொரிய அதிபர் கிங் ஜோ உன். தற்போது அமெரிக்காவால் வட கொரியாவை தாக்க முடியாது. ஏன் என்ற காரணத்தையும், வட கொரிய ராணுவத்தின் பலம் என்ன ? டொனால் ரம் கைகள் ஏன் கட்டப்பட்டுள்ளது என்பதனையும் சற்று விரிவாக பார்கலாம்…

அதிர்வின் புலனாய்வு செய்தியாளர்:

வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பலஸ்டிக் ஏவுகணைகள் பலவற்றை சோதனை செய்து வருகிறது. இவை சுமார் 10,000 மைல்கள் வரை சென்று துல்லியமாக தாக்கவல்லவை. இதனால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்கா வட கொரியா மீது போர் தொடுக்க ரகசியமாக முடிவுசெய்துள்ளது. இருப்பினும் எப்படி தாக்குவது என்பது போன்ற விடையங்களை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதேவேளை அமெரிக்கா பல நாடுகளிலும், சிறிய தீவுகளிலும் தனது படைகளை நிலை நிறுத்திவைத்துள்ளது. இது பல வருடங்களாக இருக்கும் ராணுவ தளங்கள் ஆகும். ஆனால் தற்போது வட கொரியாவின் இந்த ஏவுகணைகள் குறித்த ராணுவ நிலைகள், இருக்கும் இடம் நோக்கி சென்று தாக்க வல்லவையாக உள்ளது. குறிப்பாக குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளில் 6,000 அமெரிக்க துருப்புகள் உள்ளார்கள்.

அவர்கள் நிலைகள் மீது வட கொரியாவால் தாக்குதல் நடத்த முடியும். அதுபோக ஹவ்வாய் தீவுகள், பையோகன்ஸ் தீவுகளில் உள்ள நிலைகள் மீது கூட வட கொரியாவால் தற்போது தாக்குதல் நடத்த முடியும். இதுபோக அவர்கள் வைத்திருக்கும் பலஸ்டிக் ஏவுகனை அமெரிக்கா வரை சென்று தாக்க வல்லவை. ஆனால் அமெரிக்கா வட கொரியாவை தாக்க முடியாத நிலை தற்போது தோன்றியுள்ளது. காரணம் என்னவென்றால், வட கொரியா , ஒரு மலைப் பிரதேசத்தை தேர்ந்து எடுத்து, அதில் மிகவும் பாதுகாப்பான முறையில் 15,000 ஏவுகணைகளை பொருத்தி உள்ளது. இது வட கொரியா மற்றும் தென் கொரிய எல்லையில் உள்ளது. அமெரிக்காவின் உற்ற நட்ப்பு நாடான தென் கொரியாவின் தலை நகர் சியோலில் இருந்து வட கொரிய ஏவுகணை தளம் வெறும் 35 மைல் தொலைவில் தான் உள்ளது.

இதனால் வட கொரியா ஏவும் எந்த ஏவுகணையையும் தடுப்பது என்பது முடியாத காரியம். எனவே தென் கொரியா பெரும் சிக்கலில் மாட்டியுள்ளதால் அமெரிக்காவால் எந்த ஒரு நகர்வையும் மேற்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவின் கைகளை கட்டி, வாயை பொத்திக்கொண்டு அமைதியாக இரு. இல்லையென்றால். உன் மிக நெருங்கிய நட்பு நாடான தென் கொரியாவை அழித்துவிடுவேன் என்று புது விதமாக பயமுறுத்தியுள்ளது வட கொரியா . இதனால் அமெரிக்கா மிகவும் குழப்பிப் போய் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால் ரம் அவசர உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடத்தி, நிலமையை ஆராய்ந்து வருவதாக றொயிட்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

-athirvu.com