துருக்கியில் விமான தளத்தில் இருந்த அமெரிக்க விமானம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்ற ரஷ்யா இளைஞரை துருக்கி பொலிசார் கைது செய்துள்ளனர்.
Southern Adana மாகாணத்தில் உள்ள Incirlik Air Base-ல் இருந்த விமானம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்ட Renad Bakiev என்ற ரஷ்யா குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Alevi சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதற்காகவும் Renad Bakiev திட்டமிட்டுள்ளதாகவும் பொலிசார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Renad Bakievவுக்கு ஐ.எஸ் தீவிரவாத குழுவுடன் தொடர்பு இருப்பதாக பொலிசார் சந்தேகமடைந்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க விமானப்படை இன்ரிர்கிக் விமானத் தளத்தை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com