வட கொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்க முயன்றால் அதனை சீனா தடுத்து முறியடிக்கும் என சீனப்பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா அரசாங்கம் நடத்தும் குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிகை தான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மீது வட கொரியா போர் தொடுத்து, அதன் பின்னர் அமெரிக்கா பதிலடி கொடுத்தால் சீனா நடுநிலையை மட்டுமே பின்பற்றும்.
ஆனால், வட கொரியாவிற்கு முன்னதாக அந்நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுக்க முயன்றால் அதனை சீனா தடுத்து முறியடிக்கும் என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு அருகில் உள்ள குவாம் தீவை எப்படி ஏவுகணை மூலம் அழிப்போம் என வட கொரியா நேற்று வரைப்படங்களுடன் விளக்கம் அளித்தது அமெரிக்காவை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வட கொரியா எல்லை மீறி செயல்பட்டால் அதற்கான கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் தற்போது சீனாவும் தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-lankasri.com