சுவிட்சர்லாந்து நாட்டில் தொழுகையில் ஈடுப்படாத இஸ்லாமியர்களை கொலை செய்ய வேண்டும் என பிறரை தூண்டிய குற்றத்திற்காக இமாம் ஒருவர் மீது அந்நாட்டு பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எத்தியோபியா நாட்டை சேர்ந்த இமாம் ஒருவர் சுவிஸில் குடியேறி Winterthur மாகாணத்தில் வசித்து வருகிறார்.
இதுமட்டுமில்லாமல், An’Nur என்ற மசூதியில் இமாம் பதவி வகித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் இமாம் மதவெறியை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
‘தொழுகையில் ஈடுப்படாத இஸ்லாமியர்களை கொல்ல வேண்டும். மசூதிக்கு வருகை தராத இஸ்லாமியர்களை மிரட்டி வரவழைக்க வேண்டும்’ என பேசியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், பேஸ்புக்கில் பிறரை கொலை செய்வது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இமாமின் இச்செயல்பாடுகளை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து மசூதி தற்காலிகமாக மூடப்பட்டது.
மேலும், பிறரை கொலை செய்ய தூண்டிய குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்துள்ளது.
இந்நிலையில், பல மாத ஆலோசனைக்கு பின்னர் தற்போது இமாம் மீது பொலிசார் சட்டப்பூர்வமாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், குற்றம் செய்ய தூண்டிய காரணத்திற்காக அவரை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வரக்கூடாத வகையில் தீர்ப்பளிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-lankasri.com