அர்ஜென்டீனாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் விடயம் குறித்த பொதுமக்களின் கருத்தால் நாடே அதிர்ந்துள்ளது.
Mendoza மாகாணத்தில் வாழ்ந்து வரும் சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்நிலைக்கு காரணமான உறவினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அடையாளம் வெளியிடப்படாத சிறுமி வயிற்று வலி என தாயிடம் கூறியுள்ளார். உடனே தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறுமியை சோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான் கர்ப்பமாக இருப்பதை சிறுமி உணரவில்லை, அவர் உடல் பருமனாக இருப்பதால் 8 மாத கர்ப்பத்தை மற்றவர்களும் உணராததற்கு காரணம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற விசாரணையில் சில மாதங்கள் சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த 23 வயது உறவினரே காரணம் என தெரியவந்துள்ளது. உறவினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், அர்ஜென்டீனாவில் கருக்கலைப்பு சட்டப்படி குற்றம் என்றாலும், பாலியல் துன்புறுத்தலால் கர்ப்பமடைந்தவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏதும் இல்லையெனில் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படும்.
ஆனால், சிறுமி 8 மாத கர்ப்பம் என்பதால் மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு பிறக்க போகும் குழந்தையை ஏற்றுக்கொண்டு வளர்ப்பது குறித்த சிறுமியின் பெற்றோர்கள் முடிவு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-lankasri.com