எந்த நேரமும் போர் வெடிக்கக்கூடிய பதற்றம்! தாய்லாந்தில் தஞ்சமடையும் வடகொரியர்கள்

north_korea_flag_001ஒரு புறம் அணு ஆயுதங்களை கொண்டு வடகொரியா அமெரிக்காவை மிரட்டினால், மறுபுறம் பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்கா வடகொரியாவை மிரட்டுகிறது.

வட கொரியா – அமெரிக்கா இடையே மூண்டுள்ள வார்த்தை போர் எந்த நேரமும் போராக வெடிக்கக்கூடிய பதற்றம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தாய்லாந்தில் தஞ்சமடையக் கூடிய வடகொரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு 385 வடகொரியர்கள் தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர். அதுவே இந்த ஆண்டு ஜூன் மாத வரையில் மட்டும் 535 வடகொரியார்கள் தாய்லாந்தை வந்தடைந்துள்ளனர்.

சராசரியாக ஒரு வாரத்திற்கு 20 முதல் 30 வடகொரியர்கள் வருவதாக கூறப்படுகின்றது.

இவர்கள் ஆட்கடத்தல் காரர்களுக்கு ஆயிரக்கணக்கான டொலர்களைக் கொடுத்து தாய்லாந்தை அடைய முயற்சிக்கின்றனர்.

ஆட்கடத்தல்காரர்கள் கிறிஸ்தவ மதத் தொடர்புகளை கொண்டு கடத்துவதாகவும் சொல்லப்படுகின்றது.

தாய்லாந்தை அடைவதற்கு சீனா முழுவதும் அவர்கள் தலைமறைவாக பயணித்தாக வேண்டும். இதுவே சுரங்க(அன்டர் கிரவுண்ட்) ரயில்பாதை எனப்படுகின்றது.

ஒரு வேளை சீனாவில் வடகொரியர்கள் சிக்கினால் வட கொரியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.

தாய்லாந்தை அடைந்து விட்டால் வடகொரியர்கள் தென் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள். தென்கொரியாவில் கொரியர்கள் அனைவருமே அனுமதிக்கப்படுவதால் வடகொரியர்களுக்கும் அங்கு வாழ்வதற்கான இடமளிக்கப்படுகின்றது.

வடகொரியாவிலிருந்து தப்பிக்கும் வடகொரியர்கள் அந்நாட்டிற்கே நாடு கடத்தப்பட்டால் அங்கு அவர்கள் கடுமையான தண்டனைக்கோ தூக்குத் தண்டைக்கோ உட்பட நேரிடும் எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

-tamilwin.com