அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை

china_PMவடகொரியா மீது போர் தொடுக்க தயாராகி வரும் அமெரிக்காவிற்கு சீனா அதிபர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா அறிவித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு மத்தியில் போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நியூ ஜெர்ஸி மாகாணத்தில் விடுமுறையை கழித்து வரும் டொனால்டு டிரம்ப் அண்மையில் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அமெரிக்காவிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியா மீது எந்த நேரத்திலும் போர் தொடுப்போம்.

அமெரிக்க ராணுவம் தயாராகவே உள்ளது, வடகொரியா தனது செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் உலகம் இதுவரை சந்திக்காத அழிவை வட கொரியா சந்திக்கும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டொனால்டு டிரம்பின் இந்த பதிலடிக்கு சீனா அதிபரான ஸீ ஜின்பிங் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

‘வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் வலிறுத்தலை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், டொனால்டு டிரம்ப் தனது வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும். இச்சூழல் தொடர்ந்து கொரியா தீபகற்பத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும்’ என ஸீ ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் ஏற்பட்டால் அது மூன்றாம் உலக போரை தொடங்கி வைக்கும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com