வடகொரியாவில் உற்பத்தி; உலகம் முழுக்க காட்சிப்படுத்தும் சீனா: அம்பலமான உண்மை

வட கொரியாவில் மிகக் குறைவான ஊதியத்துக்கு வேலை செய்யும் தொழிலாளிகளைப் பயன்படுத்தி சீன நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் டண்டாங் மாநகரத்தில் மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்களை பயன்படுத்தி சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் லாபம் ஈட்டி வருகிறது.

இப்பகுதி தொழிலாளர்கள் தெரிவிக்கையில், வடகொரியாவில் உள்ள தொழிலாளர்களுக்கு துச்சமான ஊதியம் வழங்கப்படு ஆயத்த ஆடை நிறுவனங்கள் அதை சீனாவில் தயாரித்ததாக கூறி உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

உலகம் முழுவதும் இருந்தும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் மேற்கொள்கிறோம், இது மிகவும் உணர்ச்சிபூர்வமான, சிக்கலான விடயம் என்பதால் வியாபாரிகள் எவரும் வேறு தகவல்கள் பகிர மறுப்பு தெரிவித்துள்ளனர்.

டண்டாங்கில் டசின் கணக்கான துணி ஏற்றுமதி முகவர்கள் இயங்குகிறார்கள். இவர்கள் ரஷ்யா, கனடா, தென் கொரியா, ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் துணி வாங்குபவர்களுக்கும் சீனத் துணி தயாரித்து வழங்குபவர்களுக்கும் இடையே செயல்பட்டு வருகிறார்கள்.

வட கொரியாவில் நிலக்கரி தாதுக்களுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ஏற்றுமதி பொருள், ஆடை ஏற்றுமதிதான்.

கடந்த 2016 இல் மொத்த ஏற்றுமதியில் ஆடை ஏற்றுமதி மூலம் 4.6 சதவிகிதம் 2.82 பில்லியன் டொலர் வருமானத்தை வடகொரியா ஈட்டியுள்ளது.

இதனால், அமெரிக்கா சீனாவுக்கு அழுத்தம் கொடுத்தாலும் சீனாவின் மிக முக்கிய பொருளாதார கூட்டாளியாக வட கொரியா இருந்துவரும்.

மட்டுமின்றி வடகொரியா மீது அதிரடி பொருளாதார தடைகளை இன்று சீனா அறிவித்த போதும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஐ.நா மன்றம் விதித்த பொருளாதார தடையிலும் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட துணி ஏற்றுமதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com