பாரிஸில் பயங்கரவாத தாக்குதல்? சிறுமி பலி – 13 பேர் காயம் – ஐவர் ஆபத்தான நிலையில்

france_traces_001பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நபர் ஒருவர் காரை ஓட்டிச் சென்று, பீட்சா உணவகத்தின் மீது மோதியதில் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய BMW வாகனத்தை ஓட்டிய சாரதி கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டாலும், இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக கருதப்படவில்லை.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் விபத்தில் பலியான 13 வயது சிறுமியின் 3 வயது சகோதரர் பரிஸ் வைத்தியசாலையில் உயிருக்கு போராடி வருகிறார்.

கைது செய்யப்பட்ட சாரதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், இவர் மீது இதற்கு முன்னர் எவ்வித குற்றச் சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரான்சில் அண்மையில் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றது. மக்கள் மீது வாகனங்களை மோதி நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களும் அவற்றுள் அடங்குகின்றது.

இதேவேளை, கடந்த வாரம் இராணுவ வீரர்கள் மீது காரை ஓட்டிச் சென்று மோதிய சம்பவம், பயங்கரவாதச் செயல் என குறிப்பிடப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

-tamilwin.com