ஆட்சியை பாதுகாக்க..ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடுமையான தண்டணைகள்

சிரியாவில் தங்கள் ஆட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும், பாதுகாப்பதற்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடுமையான முறையில் தண்டனைகளை கொடுத்துள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா.

ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும்.

சிரியா நாடுகளின் எல்லையோரத்தில் உள்ள சில இடங்களை கைப்பற்றிய இவர்கள் அப்பகுதியில் வசித்த கிறிஸ்தவர்களையும் ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அங்கு வாழும் முஸ்லிம் பெண்களின் மீதும் மதக் கட்டளை என்ற பெயரில் பெண்ணுறுப்பை சிதைத்தல் உள்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து அட்டூழியம் செய்துள்ளனர்.

இந்நிலையில் தீவிரவாத குழுவின் ஏஜென்சியான Amaq ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

அதில் ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள Deir Ezzor பகுதியில் உள்ள மக்களுக்கு அவர்கள் வழங்கிய கொடூர தண்டனைகளின் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

அதில் ஒருவரின் கையை தனியாக வெட்டுவது, அதன் பின் கட்டிடத்தின் மேலே இருந்து வீசப்படுவது. அவர்களுக்கு ஒரு நபரின் மீது நம்பிக்கை இல்லெயன்றால் அவரின் தலையின் பின்புறம் துப்பாக்கியை வைத்து ஐந்து முறை சுட்டு கொலை செய்யப்படுவது, கழுத்தில் கயிற்றை கட்டி லார்யின் பின்புறம் கட்டி விடுவது மற்றும் கல்லெறிந்து கொலை செய்யப்படுவது போன்ற கொடூர தண்டனைகளை வழங்கியுள்ளனர்.

சமீபத்தில் மனித உரிமைகள் அமைப்பு, ஐ.எஸ் அமைப்பு தனது ஆட்சியின் கீழ் வாழும் மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்குவதாகவும், மிருகத்தனமாக செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தது.

தற்போது அதை நிரூபிக்கும் வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளன.

-lankasri.com