தமிழ்த் தலைமைகள் எங்கே? இனியும் இவர்களை நம்பத் தயாரில்லை! களத்தில் இறங்கினார் தேரர்

Batticaloa.12பௌத்த தேரர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்தமை வரவேற்புக்குரியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவு பிரதேச இணைப்பாளர் வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒரு பௌத்ததேரர் என்ற துர்ப்பாக்கிய நிலை வந்துள்ளது என்பதை நினைக்கும் போது வேதனையாகவுள்ளதாக கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதில் மேலும்,

காணி விவகாரம் உரிமைப் பிரச்சினை இல்லையா? வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தலைமைகள் எங்கே? இது மக்களின் ஆதங்கம். தமிழ்த் தலைவர்கள் குரல் கொடுக்காமையினால் தான் நான் இறங்கியிருக்கின்றேன் என அந்த தேரரே கூறியிருக்கிறார்.

அம்பிட்டிய தேரர் தாம் சார்ந்த சமுதாயத்திற்கு குரல் கொடுத்திருந்த அதேவேளை தாம் வாழும் பிரதேசத்தில் அடக்கி ஒடுக்கப்படும் இன்னொரு சிறுபான்மை இனத்திற்காக குரல் கொடுத்திருப்பதை வரவேற்கத்தான் வேண்டும்.

கண்முன்னே நடக்கும் காணி சுவீகரிப்பு காணி அபகரிப்பைத் தட்டிக்கேட்க முடியாவிடில் இன்னுமின்னும் ஏன் அரசோடு ஒட்டிக் கொண்டிருப்பது? கிழக்கு மாகாண அரசை அமைக்க ஒத்தழைப்பை வழங்கியது ஏன்? என்ற வினா எழுகின்றது.

மண்ணும் மக்களும் இல்லாமல் போன பிற்பாடு யாருக்காக தீர்வு? இதனை தமிழ்த் தேசியத் தலைவர்கள் என்று சொல்லப்படுவோர் சிந்திக்க வேண்டும்.

அதிகாரப்போட்டி, பதவிப்போட்டி, கட்சி மேலாதிக்கப் போட்டி போன்றவற்றில் காலத்தை கடத்துவதும் மேடைப் பேச்சுக்களில் காலத்தை கடத்துவதுமே இவர்களது வேலையாகி விட்டது.

அளித்த வாக்குறுதிகள் பற்றி மக்கள் கேள்விகள் கேட்டால் மழுப்பல் பதில்களை கூறிக்கொண்டு ஆள்மாறுகின்றார்கள். இனியும் இவர்களை நம்ப தமிழ் மக்கள் தயாரில்லை என்றார்.

-tamilwin.com

https://youtu.be/zeYmjfxy2E8

TAGS: