அரசினால் தமிழருக்குரிய பொலிஸ்அதிகாரம் வழங்கப்படாத நிலையில் வடக்கு முதலமைச்சர் தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் படையில் இணையச் சொல்வது சர்ச்சைக்குரிய விடயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்மையில் வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணைந்து கொள்ளுமாறு பகிரங்கமாகவே ஊடகங்களுக்கு கருத்து தெரித்துள்ளார்.
இலங்கை அரசினால் வட மாகாண சபைக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படாமல் இழுத்தடிப்புச்செய்துவருகிறது.
இந்த நிலையானது தொடர்ந்தும் இடம்பெறும் என்பதை அனைவரும் அறிவர்.
13வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இவ்வதிகாரங்கள் சிங்கள அ அரசினால் இன்னமும் முழுமையாக தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
அரசினால் தமிழருக்குரிய பொலிஸ்அதிகாரம் வழங்கப்படாத நிலையில் வடக்கு முதலமைச்சர் தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் படையில் இணையச் சொல்வது சர்ச்சைக்குரிய விடயமாகும்.
தமிழ் மக்களது பிரதிநதிகளாகிய நாம் ஒற்றுமையாக, சிந்தித்து, நிதானமாக தமிழ் மக்களைத் தவறான வழியில் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மக்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்படவேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும் என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-tamilwin.com