வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளால், அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
ஐ.நா-வில் இந்த தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்காவிற்கு பதிலடியாக குவாம் தீவின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா சில தினங்களுக்கு முன் எச்சரித்தது.
இதனால் குவாம் தீவு மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
இதனால் வடகொரியாவிடம் உலக நாடுகள் பேச்சு நடத்திவருவதாகவும், இதனால் தாக்குதல் முயற்சி கைவிடப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் குவாம் தீவு மக்களிடம் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
இந்த பதற்றத்தை நீக்க கடந்த இருதினங்களுக்கு முன் அமெரிக்க இராணுவம் அங்கு போர் பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
இந்நிகழ்ச்சியின் போது, அத்தீவில் உள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் பயிற்சிகள் இடம்பெற்றிருந்தன.
குவாம் தீவுக்கு அருகில் சுமார் 30 அல்லது 40 கிலோ மீற்றர் தொலைவில் கடற்பகுதியை இலக்காகக் கொண்டு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த வடகொரியா முடிவு செய்துள்ளதால், குவாம் தீவு மக்கள் சற்று அச்சத்துடனே இருப்பதாக கூறப்படுகிறது.
-lankasri.com