யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் பின் வீதியிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யாழ். மாநகராட்சிக்கு வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
தியாகி திலீபனின் நினைவிடம் எந்தவித பாதுகாப்பும் இன்றி வெறுமனே காணப்படும் நிலையில், அதற்கு எல்லை வேலிகளை அமைத்து பாதுகாக்குமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக இன்றைய (வியாழக்கிழமை) மாகாண சபை அமர்வில் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை தலையாக ஏற்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் தியாகி திலீபன் அவர்கள். அவரின் 30வது நினைவு நாட்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கின்றது.
-puthinamnews.com
இதக்காகவாவது வாயை தொரங்களண்டா….
7 கோடி பேர் பக்கத்தில் இருந்தும் என்ன பலன்? உருப்படாத ஈனங்கள்– என்ன- ஈழ தமிழர்கள் பலர் தங்களை ஒரு படி மேல் என்று நினைத்து நடந்தனர். இங்கு மலேசியாவில் தமிழ் நாட்டு தமிழர்களை ஒரு பொருட்டாகவே கருத வில்லை என்பது உண்மையே– ஆனாலும் அவர்கள் நம் உடன் பிறப்பு என்பதை நாம் மறக்க கூடாது. அவர்களை நல்ல வழியில் நடத்தி இருக்க வேண்டும் தமிழ் நாட்டில்-அகதிகளாக வந்தவர்களை. பல அநீதிகள் நடந்தன என்றும் கேள்வி பட்டேன்- இவ்வளவு கேடு கெட்ட ஜென்மங்களா?