பயங்கரவாதத்துக்கு எதிராக பிரித்தானியா துணை நிற்கும்: தெரேசா மே உறுதி

teresa mayபயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்பெயினுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும் என அந்நாட்டின் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

மக்கள் கூட்டத்தில் வேன் மூலம் மோதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது, சம்பவத்துக்கு பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

இதை தொடர்ந்து பார்சிலோனா நகரம் பொலிசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரித்தானியா பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பயங்கரவாதத்துக்கு எதிராக ஸ்பெயினுடன் பிரித்தானியா துணை நிற்கும்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதே போல பிரித்தானியாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கோர்பினும் சம்பவத்துக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

-lankasri.com