தயார் நிலையில் ராணுவம்: வடகொரியாவை வீழ்த்துவது குறித்து அமெரிக்கா அறிவிப்பு

thayaarவடகொரியாவுக்கு எதிராக படையை பயன்படுத்த தங்கள் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியாவை தாக்குவோம் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரி டரோ கனோ, ராணுவ மந்திரி இட்ஸ்னோரி ஒனோடெரா ஆகியோர் ஒன்றாக அமர்ந்து இது குறித்து விவாதித்துள்ளார்கள்.

பின்னர், டில்லர்சன் கூறுகையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது வடகொரியா தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

ஏனெனில், எங்கள் ராணுவ படை தயார் நிலையில் உள்ளது என கூறியுள்ளார்.

ஜேம்ஸ் கூறுகையில், எங்களை குறிவைத்து வடகொரியா ஏவுகணையை ஏவினால் உடனடியாக அதிரடி நடவடிக்கை மூலம் அதனை வீழ்த்துவோம் என கூறியுள்ளார்.

-lankasri.com