நிலச்சரிவில் சிக்கி 1,000 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

siaraசியரா லியோனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 1,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான சியரா லியோனில் பெய்த கனமழையை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

தலைநகரான ஃபீரிடவுனுக்கு அருகில் நிகழ்ந்த இவ்விபத்தில் சிக்கி 450 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது.

உயிரிழந்தவர்கள் 450 பேரையும் மீட்புக் குழுவினர் மற்றும் உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே நிலச்சரிவில் 600 பேர் வரை காணாமல் போயுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து தற்போது இவர்கள் அனைவரும் மண்ணில் புதைந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

விபத்து நிகழ்ந்து ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், காணாமல் போன 600 பேரும் உயிரிழந்திருக்கலாம் எனவும், இவ்விபத்தில் ஒட்டுமொத்தமாக 1,000-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சியரா லியோனில் தற்போது மீட்பு பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பிரித்தானியா அரசு 5 மில்லியன் பவுண்டும், சுவிஸ் அரசு 4,00,000 பிராங்கும் நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com