ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் டல் அஃபார் நகரை அவர்களிடமிருந்து மீட்க அந்நாட்டு ராணுவம் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஈராக்கில் பல்வேறு இடங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் வைத்திருக்கும் நிலையில், ஒவ்வொன்றாக ஈராக் ராணுவம் மீட்டு வருகிறது.
கடந்த யூலையில் ஐ.எஸ் பிடியிலிருந்த மொசூல் நகரை ராணுவத்தினர் மீட்டனர். தற்போது ஐ.எஸ் பிடியில் இருக்கும் கடைசி நகரங்களில் ஒன்றான டல் அஃபாரை கைப்பற்ற ஈராக் ராணுவம் முழு முயற்சியில் இறங்கியுள்ளது.
இது குறித்து ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி அளித்துள்ள பேட்டியில், ஜிஹாதிகள் சரணடைய வேண்டும் அல்லது பலியாக வேண்டும் என்ற இரண்டில் ஒன்று தான் தீர்வு என கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த உலகமும் உங்களுடன் இருக்கிறது என்று ஈராக்கிய ராணுவ படைகளை பார்த்து அபாடி கூறியுள்ளார்.
டல் அஃபார் நகரில் ராணுவம் தாக்குதலை தொடங்குவதற்கு முன், கடந்த சில தினங்களாக நகரிலிருந்த ஐ.எஸ் நிலைகள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com