உலகிலேயே முதல் முறையாக மணிக்கு 1,318 கி.மீ பயணிக்கும் அதிவேக புல்லட் ரயிலை சீனா அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புல்லட் ரயில்களின் முன்னோடியான சீனா கடந்த 2008-ம் ஆண்டு மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை அறிமுகப்படுத்தியது.
இதனை தொடர்ந்து, மணிக்கு 1,318 கி.மீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக புல்லட் ரயில்களின் சேவை விரைவில் தொடங்கப்படும் என கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சீனா தலைநகரமான பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே தற்போது உலகின் முதல் சேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளது.
இந்த புல்லட் ரயில்களில் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளதால் ஆபத்தான நேரங்களில் ரயில் தானாக நிற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரயிலின் வேகத்தையும் செல்லும் பாதை மற்றும் இடத்தையும் கணணியில் நேரடியாக கண்காணிக்கலாம்.
கடந்த 2011-ம் ஆண்டு Wenzhou மாகாணத்தில் அதிவேக புல்லட் ரயில் விபத்தை சந்தித்ததை தொடர்ந்து 43 பேர் பலியானதை தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பத்தை இந்த புல்லட் ரயில்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com