400 பேருடன் பயணிக்கும் விமானம்..வெடிகுண்டை வைத்து தாக்க முயற்சி: வெளியான தகவல்கள்

400 பேருடன் பயணிக்கும் விமானத்தை, பார்பி பொம்மையை பயன்படுத்தி தாக்குதலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக லெபான் நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் Sydney-யிலிருந்து Abu Dhabi-க்கு Etihad Airways நிறுவனத்தின் விமானம் 400 பயணிகளுடன் பயணிக்கும் விமானத்தை தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் லெபன் நாட்டின் உள்துறை அமைச்சர் Nouhad Machnouk கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், குறித்த விமானத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது என்றும் இது தொடர்பாக லெமன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவருடன் மூன்று பேர் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகவும் அவர்களின் இருவர் Khaled மற்றும் Mahmoud Khayyat ஆகியோர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றொருவரான Tarek, இவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிரியா சென்று தீவிரவாதிகளுடன் இணைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதை எங்கள் புலனாய்வு துறையினர் உறுதி செய்துள்ளதாகவும், தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நபர் பெரிய பார்பி பொம்மையில் குண்டை மறைத்து வைத்து, விமானம் புறப்படும் 20 நிமிடத்தில் வெடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாகவும், ஆனால் அவரின் லக்கேஜை சோதனை செய்த போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனால் இந்த தாக்குதல் சாத்தியமாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

120 லெபனான் பயணிகள் உட்பட 400 பேருடன் பயணிக்கும் விமானத்தை பார்பி பொம்மையை பயன்படுத்தி அந்த வெடிக்க வைக்க முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டதாகவும், இச்சம்பவம் கடந்த மாதம் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

-lankasri.com