ஸ்பெயின் பாசிலோனாவில் வாகனம் ஒன்றை மக்கள் மத்தியில் செலுத்தி. பலரை இடித்துதள்ளிய நபர் தான் இந்த யோனஸ் என்னும் 22 வயது இளைஞர். 12 பேரைக் கொலை செய்துவிட்டு. பலரை கயப்படுத்திய இந்த முஸ்லீம் தீவிரவாதி, அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தான். கால் நடையாகவே சுமார் 28 மைல் நடந்து, கடந்த 4 நாட்களாக பொலிசாருக்கு தண்ணி காட்டி வந்தான். ஸ்பெயின் நாட்டு பொலிசார் சல்லடை போட்டு தேடியும் அவன் சின்னவில்லை.
இன் நிலையில் சற்று முன்னர், பாசிலோனா நகரில் இருந்து சுமார், 28 மைல் தொலைவில் உள்ள காட்டு பகுதி ஒன்றில், பயணித்த காரை அவன் வழி மறித்து. அதில் இருந்த ஓட்டுனரை கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டு. குறித்த காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். வினியாட் என்னும் காட்டுப் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு வீட்டை உடைத்து உள்ளே செல்ல அவன் முற்பட்டவேளை, அவனை ஒரு பெண் கண்டுவிட்டார். அவர் உடனே பொலிசாருக்கு தகவல் சொல்ல. ஆயுதம் தாங்கிய பொலிசார் உடனே அங்கே குவிக்கபப்ட்டார்கள்.
இறுதியாக அவனை பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டதாக தற்போது தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதில் ஒரு விநோதமான விடையம் என்னவென்றால். பொய்யான வெடிகுண்டு அங்கி ஒன்றை அணிந்துகொண்டு அவன் அல்லாகு அக்பர் என்று கத்தியவாறு பொலிசாரை நோக்கி வந்துள்ளான். இதனால் பொலிசார் அவனை நோக்கி சுட நேர்ந்துள்ளது. எனவே தன்னை பொலிசார் சுட வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அவன் வெளியே வந்துள்ளான் என்பது தெளிவாகியுள்ள நிலையில். பொய்யான அங்கி ஒன்றை அணிந்து, பொலிசாரை வேண்டும் என்றே சுட வைத்துள்ளான். தன்னை தானே மாய்த்துக்கொள்ளாமல் பொலிசார் சுட்டு இறக்கவேண்டும் என்று இவ்வாறு செய்துள்ளான் என்பது தெரிகிறது..
-athirvu.com