அடியோடு அழியப்போகும் பாக்கிஸ்தான்!! ட்ரம்ப் எடுத்த அவசர முடிவு இது

donald-trump_orderedதீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய போது எச்சரித்துள்ளார். தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து பேசும் போதே “தீவிரவாத இயக்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால் பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும் ஆனால் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதால் அந் நாடு பெரிய இழப்புக்களைச் சந்தித்து வருகிறது.

அமெரிக்கா வழங்கும் கோடிக் கணக்கான அமெரிக்க டொலர்களை பாகிஸ்தான் பெற்றுக் கொண்டு அமெரிக்கா எதிர்த்து போர் புரியும் தீவிரவாதத்துக்கு புகலிடம் வழங்கிவருகிறது. இந் நிலையை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையெனில் தீவிரவாதத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் ஆதரவளித்தமைக்கான விளைவை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும்.

பாகிஸ்தான் தனது அதிகார அரச எல்லைப்பரப்பினுள் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டி நாட்டை அமைதிப்பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் அதற்கான சரியான சந்தர்ப்பம் இது” என தெரிவித்தார். இறுதியாக இந்தியாவுடனான உ றவுகளை மேம்படுத்த அமெரிக்கா விரும்புவதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியில் உயர்த்த தம்மோடு இணைந்து உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

-athirvu.com