சற்று முன் அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக, வடகொரியா ஐ.எஸ் தீவிரவாதிகள் குழு ஒன்றுக்கு தனது அணு குண்டு ஒன்றை விற்க்க எத்தணித்துள்ளது என்று தெரிவித்துள்ளது சி.ஐ.ஏ. இதனால் பெரும் ஆபத்து நேரலாம் என்றும். அதனை அமெரிக்காவில் வெடிக்க வைக்க ஐ.எஸ் தீவிரவாதிகள் முற்படுவார்கள் என்றும் , அமெரிக்க மேலும் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து அணு குண்டு கதிரியக்கத்தை, வேவு பார்க்கும் பிரத்தியேக சட்டலைட் ஒன்றை அமெரிக்கா தற்போது வட கொரியா பக்கம் திருப்பியுள்ளது என்றும் கூறப்படுகிறது. அன் நாடு இவ்வாறு தனது அணு குண்டை விற்பனை செய்யுமே ஆனால். அது பெரும் அழிவுக்கு வித்திடும். அமெரிக்கா தனது படைகளை வடகொரியா நோக்கி நகர்த்தியுள்ள நிலையில். சிம்பிளாக வடகொரியா ஒரு காயை நகர்த்தி அமெரிக்காவை கிலி கொள்ளவைத்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினுள் அமெரிக்கா, தனக்கு உளவு பார்க்கும் ஆட்களையும் வைத்திருக்கிறது. இவர்கள் ஊடாகவே இச்செய்தி கசிந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எது எப்படி என்றாலும், அமெரிக்காவின் கண்ணுக்குள் விரவை விட்டு ஆட்டுவது என்று வட கொரியா , ஒரு திட்டத்தோடு தான் இருக்கிறது…
-athirvu.com