அமெரிக்காவின் கூச்சலால் வடகொரிய அதிபரின் அதிரடி முடிவு!! ராக்கெட்கள், வெடிகுண்டுகள் இந்தளவில்

north_south_001சமாதான பேச்சுவார்த்தையின் பக்கம் அமெரிக்கா நெருங்கிவரும் நிலையில் கூடுதலாக ராக்கெட்கள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரிக்குமாறு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக ராக்கெட்கள்,

வெடிகுண்டுகள் தயாரிக்குமாறு வடகொரியா அதிபர் அதிரடி உத்தரவு பியாங்யாங்: குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை அழித்து விடுவோம் என்று மிரட்டிவரும் வடகொரியாவுக்கு பதில் அளிக்கும் வகையில் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார். எனினும், பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று போனிக்ஸ் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘வடகொரியா அதிபர் தற்போது அமெரிக்காவை மதிக்க தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். எனவே, இருநாடுகளுக்கிடையிலான மோதல்போக்கில் ஒருவேளை சாதகமான மாற்றம் உருவாகலாம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், வடகொரியா நாட்டில் ராக்கெட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நேற்று அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் சென்று பார்வையிட்டார். அப்போது கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் மற்றும் திரவ எரிபொருளால் இயங்கும் நவீனரக ராக்கெட்கள் தயாரிக்கப்படும் தொழில்நுட்பம் குறித்து கிம் ஜாங் உன்-னிடம் அங்குள்ள விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.

சுமார் ஒருமணி நேரம் அந்த தொழிற்சாலையை பார்வையிட்ட கிம் ஜாங் உன், எரிபொருளால் இயங்கும் நவீனரக ராக்கெட் என்ஜின்கள், மற்றும் ராக்கெட்களின் மூக்கு பகுதியில் இணைக்கப்பட்டு அனுப்பும் ஆபத்தான வெடிகுண்டுகளை அதிக அளவில் தயாரிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

-athirvu.com