ஸ்பெயின் தீவிரவாதத் தாக்குதல் பலி 16 ஆக உயர்வு

spainAஸ்பெயின் நாட்டில் பார்சலோனா நகரில் நடந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

இச்சம்பவத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் நாட்டின் 51 வயது பெண்மணி ஞாயிரன்று மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக் உயர்ந்தது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பார்சலோனா மற்றும் அதன் அருகாமை சுற்றுலா கேந்திரமான காம்பிரில்ஸ் ஆகியவற்றில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 120 பேர் காயமடைந்தனர்.

பார்சிலோனாவில் வேன் ஒன்றை கூட்டத்தினுள் செலுத்தியதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது. சில மணி நேரங்கள் கழித்து காம்பிரில்ஸ்சில் இதே போன்ற தாக்குதலை ஒரு கார் மூலம் நடத்தினர்.

காம்பிரில்ஸ்சில் தாக்குதல் நடத்திய ஐவர் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

-dailythanthi.com