ரோஹிங்கியா தீவிரவாதிகள்: மியான்மார் கூற்றுக்கு வங்காளம் எதிர்ப்பு

rohingya1தங்கள் நாட்டு பிரஜைகள் யாரும் எல்லைத்தாண்டி தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்று வங்காள தேசம் கூறியுள்ளது. மேலும் இரு நாடுகளும் இணைந்து எல்லைப்புறத்தில் ரோந்து பணி மேற்கொள்ள அது அழைப்பு விடுத்துள்ளது.

”ரோஹிங்கியா தீவிரவாதிகள் உண்மையில் மியான்மார் நாட்டு குடிமக்கள். ஆகையால் வங்காள தேசத்தவர் யாரும் எல்லைத்தாண்டி தாக்குதல் நடத்தவில்லை” என்று அந்நாடு கூறியது.

மியான்மாரின் ராகைன் மாநிலத்தின் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்களை அந்நாட்டு அரசு அதிகாரிகள் இன ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குவதாக கூறி வங்காள தேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.  மேலும் அராகன் ரோஹிங்கியா விடுதலைப் படை எனும் ஆயுதக் குழுவை நிறுவியுள்ளனர். இதன் மூலம் கடந்த அக்டோபர் மாதம் மூலம் பல மோதல்கள் நடந்து வந்துள்ளன. ஆயுதக்குழுக்கள் மீது மியான்மார் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 100 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக வங்காள தேசம் கூறியுள்ளது.

எல்லைத்தாண்டி வரும் மக்களை வங்காளதேசம் மனித நேயத்துடன் திரும்ப அவர்கள் நாட்டிற்குள்ளேயே அனுப்பி வருவதாகவும் ஆனால் அவர்களை மியான்மார் ஹெலிகாப்டர்கள் சுடுவதாகவும் எல்லைக்காவல் படைத் தலைவர் தளபதி அபுல் ஹோசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

-dailythanthi.com