தென் கொரியா 8 குண்டுகளை வட கொரிய எல்லையில் போட்டு வெடிக்க வைத்தது !

வட கொரியா இன்று அதிகாலை, மேலும் ஒரு பலஸ்டிக் ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. அணு குண்டை தாங்கி பல மைல்கள் செல்லக்கூடிய இந்த ஏவுகணையை , வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பரிசோதனை செய்துள்ளார். குறித்த ஏவுகணை ஜப்பான் மேலாக பறந்து சென்று, ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்துள்ளது. அது சுமார் 1,700 மைல் தூரம் சென்று கடலில் வெடித்துள்ளது. இதனை ஜப்பான் ராணுவம் சுட்டு வீழ்த்தவில்லை. காரணம் அதில் அணு குண்டு இருந்திருந்தால். அது ஜப்பான் நாட்டின் மேல் விழுந்து வெடிக்கும் அல்லவா.

இன் நிலையில் பொறுமையை இழந்த தென் கொரியா தனது நாட்டு வான்படையை உடனே வட கொரிய எல்லைக்கு அனுப்பி அங்கே 8 குண்டுகளை வீசி வெடிக்கவைத்துள்ளது. இதனால் அப்பிராந்தியத்தில் பெரும் பதற்றம் தோன்றியுள்ளது. ஜப்பானுக்கு அருகில் உள்ள குவாம் என்னும் சிறிய தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அங்குள்ள பெரும் அமெரிக்க படைத் தளத்தை சிறிது நேரத்தில் தன்னால் முற்றாக அழிக்க முடியும் என்று , வட கொரிய அதிபர் மீண்டும் மீண்டும் மிரட்டி வருகிறார்.

இன் நிலையில் இன்று காலை நடத்தப்பட்ட மற்றுமொரு பரிசோதனை, அமெரிக்காவை பொறுமையின் எல்லைக்கு தள்ளியுள்ளது. இதற்கான பதிலடியை விரைவில் எதிர்பார்கலாம் ..

-athirvu.com