இது நாள் வரை, தனக்கு பிடிக்காத நபர் என்றால் கூட சர்வதேச பொலிசார் பட்டியலில் அவர்களது பெயரை இணைத்து தமிழர்களை பெரும் கொடுமைக்கு ஆளாக்கி வந்தது இலங்கை அரசு. அதுவும் மகிந்த ஆட்சிக் கலாத்தில் பல தமிழர்களது பெயரை , அவர்கள் இன்ரர் போலிடம் கொடுத்து பிடியாணை பிறப்பித்து பெரும் பித்தலாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் தற்போது அதே அம்பு அவர்கள் பக்கம் பாய ஆரம்பித்துள்ளது. ஆம் !
பிரேசில் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ள தூதுவரும் முன் நாள் தளபதியுமான ஜெகத் ஜயசூரியாவை பிடிக்கவேண்டும் என்று பிரேசில் நீதிமன்றம் ஊடாக சர்வதேச பிடியாணை ஒன்றை கொண்டுவர தமிழர்கள் மற்றும் ஜாஸ்மின் சூக்கா போன்றோர் முனைந்து வருவதாக அதிர்வு இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. பிரேசில் நாட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில். அதற்கு ஆஜராகாமல் அவர் தப்பிச் சென்றதை தொடர்ந்து. அவரை கைதுசெய்யவேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட உள்ளது.
இதனை நீதிபதி வழங்கினால், அதனை சர்வதேச பொலிசாரிடம் கொடுத்து தேடும் சிவப்பு பட்டியலில் அவர் பெயரைப் போட முடியும். அப்படி போட்டால் இலங்கையில் இருந்து அவர் வாழ் நாளில் வேறு எந்த ஒரு நாட்டுக்கும் செல்ல முடியாத நிலை தோன்றும். ஒரு காலத்தில் தமிழர்கள் மீது சர்வதேச பொலிசாரை ஏவி விட்டது சிங்களம். ஆனால் இன்றைய நிலையைப் பாருங்கள்…
-athirvu.com