நைரோபி, தீர்ப்பிற்கு பிறகு வெற்றி பெற்றிருந்த அதிபர் உகுரு கென்யாட்டா நீதிபதி மோசடி பேர்வழிகள் என்றார்.
தீர்ப்பை மதிப்பதாகவும் மக்கள் அமைதிகாக்கவும் அழைப்பு விடுத்த அவர் பின்னர் நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.
அடுத்த 60 நாட்களுக்கு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. சுமார் 40 பழங்குடியினர் வாழும் கென்யாவில் தேர்தல் முடிவுகள் கடுமையான கலவரத்தை உருவாக்கும் வரலாறு உண்டு. இப்போதும் வன்முறை வெடிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கென்யாட்டா 1.4 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. தேர்தலில் மோசடி நடந்ததாக தோல்வியுற்ற வேட்பாளர் ஒடிங்கா வழக்கினை தொடுத்திருந்தார். கென்யாட்டாவும், ஒடிங்காவும் அரசியல் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள்.
தீர்ப்புப் பற்றி ஒடிங்கா கூறும்போது “கென்ய மக்களுக்கும், ஆப்பிரிக்க மக்களுக்கும் வரலாற்று தினமாக இது அமைகிறது என்றார். தேர்தல் ஆணையத்தை ‘அழுகிப்’போன அமைப்பு என்றார்.
தேர்தலில் பெரிய முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று ஐரோப்பிய தேர்தல் பார்வையாளர்கள் கூறினாலும் ஒடிங்கா தரப்பு பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்திருந்தது. பார்வையாளர் குழு ஒடிங்காவை மக்கள் தீர்ப்பை ஏற்கும்படியும் கோரியிருந்தது.
-dailythanthi.com