வடகொரியாவில் பாரிய அதிர்வு தன்மை ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
6.3 ரிக்டர் அளவில் இந்த அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அது பூமிக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அதிர்வு வடகொரியாவில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஏவுகணை சோதனையின் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஹைட்ரஜன் குண்டு என கருதப்படுகின்ற பெலிஸ்டிக் ஏவுகணைகளை கையளக்கூடிய மிகவும் மேம்பட்ட அணு ஆயுதம் ஒன்றை தாம் தாயரித்துள்ளதாக வடகொரியா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com