ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரம் சூ கிக்கு அழுத்தம் அதிகரிப்பு, பேச வேண்டும் – மலாலா யூசுப்

malala su keeமியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது.

பல்வேறு தாக்குதலை எதிர்க்கொண்டு தலைமுறைகள் கணக்கில் வசித்துவரும் இவர்களுக்கு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது. மியான்மரில் நடக்கும் சம்பவங்களை எதிர்க்கொண்டு வசிக்க முடியாத இஸ்லாமியர்கள் பிறநாடுகளாக அகதிகளாக இடமாறி வருகிறார்கள். பெரும்பாலும் வங்காளதேசம் மற்றும் இந்தியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியாவை நோக்கி வருகிறார்கள். அவர்கள் எல்லை மாநிலங்களில் அகதிகளாக வசித்து வருகிறார்கள். 1990-த்திற்கு பின்னர் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடந்து வருகிறது.

ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது.

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது அந்நாட்டு ராணுவம் பிரயோகிக்கும் வன்முறை தொடர்பான வீடியோக்கள் வெளியாகியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது ரோஹிங்யா இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என கூறியதற்கு வங்காளதேசம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இப்போது போராளிகளுக்கு எதிராக மியான்மர் பாதுகாப்பு படை தாக்குதலை தொடங்கி உள்ளது, இதனால் கடந்த சில நாட்களாக அங்கு வன்முறை காடாக காட்சியளிக்கிறது. வன்முறை சம்பவங்களில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.

பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மீண்டும் வங்காளதேச எல்லையை நோக்கி படை எடுக்க தொடங்கி உள்ளனர். இப்போதும் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வங்காளதேசம் நோக்கி சென்று உள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் உலக நாடுகள் மியான்மருக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது. மியான்மரின் ரோஹிங்யா செய்தியாளர்கள் மற்றும் விசாரணையாளர்கள் எளிதான முறையில் பிரவேசிக்க முடியாத பகுதியாக உள்ளது, எனவே இது தொடர்பான குற்றச்சாட்டுகளை அடையாளம் காண்பது என்பது சிரமமானதாக உள்ளது.

மியான்மரில் மக்களாட்சி மலர போராடிய சூ கி-யால் (1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்) தங்களுக்கு விடிவு பிறக்கும் என்ற அவர்களுக்கு ராணுவத்தினால் இடி இறக்கப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே உள்ளது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் தொடர்ந்து ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீதான ராணுவ தாக்குதல் தொடர்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக இப்போது மியான்மரின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும் சூ கீ இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மியான்மரில் இருந்து வங்காளதேசத்திற்கு சுமார் 90 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக வந்து உள்ளனர் என கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் பேசாமல் மவுனம் காக்கும் சூ கிக்கு மேற்கத்திய நாடுகள் மற்றும் பிற தரப்பில் இருந்து அழுத்தம் அதிகரித்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் மாணவி மலாலா யூசுப் பேசுகையில், மியான்மரில் இஸ்லாமியர்கள் நடத்தப்படும் அவமானகரமான முறைக்கு சூ கி கண்டனம் தெரிவிக்க வேண்டும், அவருடைய பேச்சுக்காக உலகம் காத்திருக்கிறது.

இஸ்லாமியர்கள் நடத்தப்படும் முறைக்கு நான் பல ஆண்டுகளாக கண்டனம் தெரிவித்து வருகின்றேன் எனவும் மலாலா கூறிஉள்ளார்.

-dailythanthi.com