பிரிக்ஸ் தீவிரவாத பிரகடனத்தை பாகிஸ்தான் நிராகரித்தது

pak terrபிரிக்ஸ் அமைப்பு வெளியிட்ட தீவிரவாத எதிர்ப்பு தீர்மானித்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தது.

இஸ்லாமாபாத்

இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் எதுவும் தங்கள் மண்ணிலிருந்து செயல்படவில்லை என மறுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்தகீர் தங்கள் நாட்டு நாடாளுமன்ற பாதுகாப்பு நிலைக்குழுவின் கூட்டத்தில் பேசும் போது, “ பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து செயல்படும் அனைத்து தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு சில மிச்சம் மீதியுள்ள குழுக்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன” என்றார்.

ஆனால் ஆப்கானிஸ்தானின் 40 சதவீதப் பகுதி தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்றார் அவர். இதை அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கனின் 407 மாவட்டங்களில் 57 மட்டுமே அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றார் அவர். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் அனைட்து தரப்பிலும் கலந்தாலோசித்து விட்டு அமெரிக்காவிற்கு செல்வார் என்றார் தஸ்தகீர்.

அமெரிக்காவின் நடவடிக்கை பாகிஸ்தானில் பிளவை உண்டாக்கும் என்பதால் இப்பிரச்சினையை அமெரிக்காவுடன் அமைதியாக பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றார்.

 -dailythanthi.com