உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறியும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா நேற்று முன்தினம் 6–வது முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது.
வடகொரியாவின் இந்த செயலுக்கு ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளன. வடகொரியாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல் வந்தால் ராணுவ ரீதியில் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வடகொரியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், “ அமெரிக்காவுக்கு மேலும் சில பரிசுப்பெட்டகங்களை அனுப்ப வடகொரியா தயாராக உள்ளதாக வடகொரிய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-dailythanthi.com