வடகொரியாவிற்கு எதிராக எண்ணெய் மற்றும் ஆடை வர்த்தக பொருளாதார தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா தயாராகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையின் ஆரம்ப வரைவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா கடந்த தினம் அணு குண்டு சோதனையை நடத்தி இருந்தது. இதனை அடுத்து, வடகொரியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதியை செய்வதை தடுப்பதுடன்,
வடகொரியாவில் இருந்து ஆடை இறுக்குமதி செய்தல், தொழிலாளர்களை பெற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கும் தடைவிதிக்க அமெரிக்கா கோரவுள்ளது. அத்துடன் வடகொரிய தலைவர் கிம் ஜொங் யுன்னின் சொத்துக்களையும் முடக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
-athirvu.com